தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Ops: ’அமித்ஷாவை கெஞ்சவிட்ட ஈபிஎஸ்!’ போட்டு உடைத்த ஓபிஎஸ்!

EPS Vs OPS: ’அமித்ஷாவை கெஞ்சவிட்ட ஈபிஎஸ்!’ போட்டு உடைத்த ஓபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 12:09 PM IST

“ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சை கேட்க மறுத்த ஈபிஎஸ் என்று அதிமுகவினர் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர்”

ஈபிஎஸ் - அமித்ஷா - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - அமித்ஷா - ஓபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக பேசி ஓபிஎஸ், ”நான் இந்த உண்மையை சொல்லியே ஆக வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திரு.அமித்ஷா அவர்கள் இங்கே வந்து என்னையும், ஈபிஎஸையும் கூப்பிட்டு பேசினார். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் டிடிவி தினகரன் பிரிந்து நின்றதால் அதிமுக ஓட்டுகள் பிரிந்து தோல்வி அடைந்துள்ளோம். டிடிவி தினகரன், சின்னம்மா உடன் இணைந்து போட்டியிட்டால் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என அமித் ஷா சொன்னார். 

ஆனால் டிடிவி தினகரன், சின்னம்மாவை சேர்க்க முடியாது என ஈபிஎஸ் சொல்லிவிட்டார். 

நீங்கள் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் பாஜகவுக்கு தரும் தொகுதிகளில், கூடுதலாக 20 தொகுதியில் தாங்க, நான் அவர்களுக்கு பகிர்ந்து தருகிறேன் என அமித்ஷா சொன்னார். ஆனால் ஈபிஎஸ் தர முடியாது என்றார். 

15 தொகுதியாவது தரலாமா? என அமித்ஷா கேட்டதற்கு முடியாது என்றார். 

சரி ஒரு 12 தொகுதிகள் தரலாமா என கேட்டதற்கும், முடியாது என்றார். 

10 தொகுதிகளாவது கொடுக்கலாமா என்றதற்கும் ஈபிஎஸ் மறுத்துவிட்டார்.  

சரி இருக்கட்டும். ஆனால் டிடிவி தினகரன் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன். அவர் சொல்லும் 10 பேருக்கு வாரியத் தலைவர் பதவியை தர முடியுமா என்று அமித்ஷா கேட்டார்.  ஆனால் அதெற்கெல்லாம் உறுதி தர முடியாது என ஈபிஎஸ் சொன்னார். இந்த பதிலை சொன்ன உடனேயே அமித்ஷா எழுந்துவிட்டார்” என ஓபிஎஸ் பேசினார். 

ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சை கேட்க மறுத்த ஈபிஎஸ் என்று அதிமுகவினர் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்