தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கூட்டணியை முடிவு செய்வது யார்? எடப்பாடி பழனிச்சாமி ‘பளார்’ பதில்

கூட்டணியை முடிவு செய்வது யார்? எடப்பாடி பழனிச்சாமி ‘பளார்’ பதில்

Priyadarshini R HT Tamil
Apr 03, 2023 11:34 AM IST

EPS at Salem : சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து இன்று சேலம் மாநகரின் மையப் பகுதியில் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நிகழ்விடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்ப மரியாதை என உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ளவர்களே மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக, பாஜக கூட்டணி தொடர்பாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுககூட்டணியில் பா.ஜ.க. உள்ளதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதியானது என அமித்ஷா கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை.  

எம்ஜிஆர் கட்சியை துவங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவருக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் எதிர்வரும் தலைவர்களும் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம். இவ்வாரு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்