தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Engineering Admission : பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களே! உங்களுக்கு முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது

Engineering Admission : பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களே! உங்களுக்கு முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது

Priyadarshini R HT Tamil
Jun 25, 2023 10:40 AM IST

Engineering Admission : பின்னர் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் 20ம் தேதி வரை நடைபெற்றது. அடுத்தாக தரவரிசை பட்டியல் வரும் 26ம் தேதி நாளை வெளியிடப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக ஜூலை 2ம் தேதி தொடங்க இருக்கிறது. ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பபதிவு மே மாதம் 5ம் தேதி தொடங்கி கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். 

அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் 6ம் தேதியே வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய ரேண்டம் எண்ணைwww.tneaonline.org இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. 

ஒரே மாதிரி கட்ஃஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலமாக முடிவு செய்யப்படும்.

பின்னர் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் 20ம் தேதி வரை நடைபெற்றது. அடுத்தாக தரவரிசை பட்டியல் வரும் 26ம் தேதி நாளை வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்