தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கருணாநிதி நினைவு நாள்..அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் மரணம்!

கருணாநிதி நினைவு நாள்..அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் மரணம்!

Karthikeyan S HT Tamil
Aug 07, 2023 12:44 PM IST

DMK Councillor Died: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் சண்முகம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் சண்முகம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் (ஆகஸ்ட் 7) இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் பேரணி நிறைவடைந்தது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர அவசரமாக அவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்