தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk: அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: இபிஎஸ்-க்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

AIADMK: அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: இபிஎஸ்-க்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Manigandan K T HT Tamil
May 04, 2023 11:10 AM IST

Edapadi Palanisamy: ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவுக்கு 6 வாரத்தில் பதிலளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக மெட்ராஸ் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றை அணுகி பல்வேறு சட்டப் போராட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் நடத்தினார்.

எனினும். நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்தன. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதுதொடர்பான உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கும் இபிஎஸ் தரப்பு வழங்கியது.

ஆனாலும், இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக ஏற்காமல் தேர்தல் ஆணையம் இருந்து வருந்தது.

இதுதொடர்பாக இபிஎஸ் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதைத் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் உத்தரவின்பேரில் தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை அறிந்து இபிஎஸ் தரப்பின் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இரட்டை இலை சின்னமும் இபிஎஸ் தரப்புக்கு வந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட் 6 வாரத்திற்குள் இபிஎஸ்ஸும், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

6 வாரத்திற்கு பிறகு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கில் விசாரணை வரவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews  

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்