தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரசு அச்சிட்ட காலண்டர்லயே இப்படியா?

அரசு அச்சிட்ட காலண்டர்லயே இப்படியா?

Priyadarshini R HT Tamil
Jan 23, 2023 12:37 PM IST

தமிழக அரசால் அச்சிடப்பட்ட, 2023ம் ஆண்டுக்கான காலண்டரில், தை மாதத்தில், இரண்டு நாட்கள் அதிகரித்தும், மாசி மாதத்தில், இரண்டு நாட்கள் குறைத்தும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இது தெரியவந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தேதிகள் தவறாக அச்சிடப்பட்டுள்ள அரசின் இந்தாண்டு காலெண்டர்
தேதிகள் தவறாக அச்சிடப்பட்டுள்ள அரசின் இந்தாண்டு காலெண்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

2023ம் ஆண்டுக்கான காலண்டர் வழக்கம்போல் அச்சிடப்பட்டு, அவை பாதியளவு வினியோகமும் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு அச்சிட்ட காலண்டரில், தை மாதம் 29ம் தேதியோடு முடியும் நிலையில், தவறாக 30 மற்றும் 31ம் தேதி அடுத்தடுத்து அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல், மாசி மாதத்தில், 30 நாட்கள் வருவதற்கு பதிலாக, 28 நாட்கள் மட்டுமே வருமாறு பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. 

மற்ற காலண்டர்களோடு ஒப்பிட்டு, இந்த தவறை காலதாமதமாக தெரிந்து கொண்ட எழுதுபொருள் அச்சுத்துறை அதிகாரிகள், வினியோகம் செய்யப்பட்ட அரசு காலண்டர்களை திரும்பப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அரசுத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் அச்சிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான காலண்டர்களில் பிழை ஏற்பட்டுள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தை மாதம், இரண்டு நாட்கள் கூட்டியும், மாசி மாதம் இரண்டு நாட்கள் குறைத்தும் அரசு காலண்டர் அச்சிடப்பட்டுள்ளதால், பிப்., 12ம் தேதியோடு முடியும் தை மாதம், பிப். 14ம் தேதி வரை நீடிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த காலண்டரில் பிழைகள் உள்ளன. 

இதுபோல், பிழையாக காலண்டர் அச்சடிக்கப்பட்டதால், அதற்காக செலவழிக்கப்பட்ட பணம் வீணாகிவிட்டது. அரசு துறையினர் கொஞ்சம் கவனத்துடனும், அக்கறையுடனும் இந்த பணிகளை செய்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். 
 

IPL_Entry_Point

டாபிக்ஸ்