தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எஸ்எஸ்சிதேர்வு விண்ணப்பிக்க கால அளவு நீட்டிப்பு

எஸ்எஸ்சிதேர்வு விண்ணப்பிக்க கால அளவு நீட்டிப்பு

Priyadarshini R HT Tamil
Feb 20, 2023 01:12 PM IST

Staff Selection Commission: மத்தியஅரசுப் பணிகளில் உள்ள 11,409 காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மத்தியஅரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 காலிப்பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி பணிகளுக்கான தேர்வு கணினி வழியில் ஏப்ரல் மாதத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டத் தேர்வில் 40 வினாக்களும் 2ம் கட்டத்தேர்வில் 50 வினாக்களும்என மொத்தம் 90 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் அதிகபட்சம் 3 மதிப்பெண் வழங்கப்படும்.

இதற்குதகுதியானவர்கள் எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்வாயிலாக பிப்ரவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதி நாளில் இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். 

இதனால்விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ம் தேதி தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த கூடுதல்விவரங்களுக்கு https://ssc.nic.in  என்றஇணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதற்கிடையே இனிவரும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்