Crime: தருமபுரியில் பாலியல் தொல்லை கொடுத்து சிறுவன் கொலை செய்தது அம்பலம்!
Dharmapuri: 6 வயது சிறுவனை கட்டிப்போட்டு ஆசனவாயில் பாலியல் உறவு கொண்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி அருகே 6 வயது சிறுவனை கட்டி போட்டு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் சிறுவன் கொலை வழக்கில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டியை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியின் என்பவரின் மகன் மதியரசு. ஆறு வயதாகும் மதியரசு கடந்த இரு நாள்களாக காணவில்லை. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர், சிறுவன் மதியரசை தேடி வந்துள்ளனர். இதையடுத்து தாட்டம்பட்டி பகுதியில் தண்ணீர் இல்லாமல் காலியான குடிநீர் தேக்க தொட்டியில் துர்நாற்றம் வீசுவதை கண்டு, அதில் சென்று பார்த்தபோது காணாமல் போன சிறுவன் மதியரசு இறந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறுவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன், நீர்தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை நரபலி கொடுப்பதற்காக யாராவது கடத்தினார்களா, சிறுவன் மரணத்தில் பின்னணியில் வேறு காரணங்கள எதுவும் உள்ளதா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆதிமூலத்தின் உறவினரான 19 வயது இளைஞர் பிரகாஷ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் 6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி தனிமையில் அழைத்துச் சென்று கட்டிப்போட்டு ஆசனவாயில் பாலியல் உறவு கொண்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்