தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Covai Car Blast: யார் இந்த முபசீரா? திமுக கவுன்சிலர் ஆனது எப்படி? என்ஐஏ சோதனைக்கு பின் என்ன சொன்னார் கணவர்!

Covai Car Blast: யார் இந்த முபசீரா? திமுக கவுன்சிலர் ஆனது எப்படி? என்ஐஏ சோதனைக்கு பின் என்ன சொன்னார் கணவர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 16, 2023 11:17 AM IST

கோவையில் கடந்த ஆண்டு திமுக வார்டு கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்ட முபசீராவின் கணவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் பெண்கவுன்சிலருடன் கணவர்
திமுகவின் பெண்கவுன்சிலருடன் கணவர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் தொடர்புடைய ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் படித்த அரபிக் கல்லூரியில் உடன் படித்தவர்கள் உள்ளிட்ட 22 பேர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கோவையில் கடந்த ஆண்டு திமுக வார்டு கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்ட முபசீராவின் கணவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை முடிந்த நிலையில் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி யின் காய்கறி கடை அருகே என் கடை உள்ளது. அதன் அடிப்படையில் என்னிடமும் விசாரணை செய்தனர். அரபிக் கல்லூரிக்கு சென்றீர்களா என விசாரித்தனர்... நான் சென்றது இல்லை என கூறினேன். 1.5 ஆண்டுகளாக தான் சனோஃபர் அலியை தெரியும். பக்கத்து கடை என்ற அடிப்படையில் விசாரித்து விட்டு கிளம்பினர். ஒரு சில இடங்களுக்கு சென்று வந்துள்ளீர்களா என கேட்டனர். 5 அதிகாரிகள் வந்து இருந்தனர். என்ன என்ன வியாபரம் செய்தனர் என கேட்டனர். சனோபர் எப்படி தெரியும் என மட்டும் கேட்டனர். முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவியிடம் எந்த விசாரணை நடத்தவில்லை என தெரிவித்தார்.‘

IPL_Entry_Point

டாபிக்ஸ்