தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: ஆளுநர் செந்தில் பாலாஜியை நீக்கச் சொன்னாரா? நீதிமன்றம் கேள்வி

Senthil Balaji: ஆளுநர் செந்தில் பாலாஜியை நீக்கச் சொன்னாரா? நீதிமன்றம் கேள்வி

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2023 12:06 PM IST

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதல்வர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி-ஆர்.என்.ரவி
செந்தில் பாலாஜி-ஆர்.என்.ரவி

ட்ரெண்டிங் செய்திகள்

அமலாக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த 16-ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில் , அமைச்சர் ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது. ஜாமீன் கேட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.

எனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்டவிரோதமானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று ராமசந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி.ஆடிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் அமைச்சராக தொடர்வதில் தனக்கு விருப்பம் இல்லை என ஆளுநர் தெரிவித்தார். ஆனால் அமைச்சரை நீக்க வேண்டும் என்று ஆளுநர் எங்கு தெரிவித்துள்ளார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார் என விளக்கம் அளித்தது.

இதையடுத்து இந்த வழக்கை சந்திப்பதற்காக தகுதி இழப்பு ஆக வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தகுதி இழப்பு ஆகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதல்வர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் நீதிமன்றம் விளக்ககம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்