தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Counseling For Admission To Government Arts And Science Colleges Will Be Held Till 10th

Govt Arts and Science Colleges : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு துவக்கம் – 10ம் தேதி வரை நடக்கிறது

Priyadarshini R HT Tamil
May 29, 2023 03:37 PM IST

Govt Arts and Science Colleges : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கு முதலிலும், பொதுப்பிரிவினருக்கு 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளும் தேர்வு முடிவுகள் வந்தது முதல் தங்களுக்கு தேவையான கல்லூரி படிப்புகளில் சேர்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மற்றொருபுறம் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி சிறப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டு, உடனடி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என அந்த வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக கடந்த மே 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மொத்தம் 2.44 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 1,15,752 மாணவர்களும், 1,28,274 மாணவிகளும், 78 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வரும் மே 25ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகிய நிலையில், அவர்களுக்கான முதல் கலந்தாய்வு இன்று தொடங்கியது.

அந்த வகையில் இன்று (மே 29ம் தேதி) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மே 31ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே விண்ணப்பிதுள்ள மாணவர்கள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்போது, சென்று தங்களுக்கு தேவையான பிரிவில் சேர் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்