தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin : 600 க்கு 600 மதிப்பெண்.. திண்டுக்கல் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய முதல்வர்!

Cm Stalin : 600 க்கு 600 மதிப்பெண்.. திண்டுக்கல் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய முதல்வர்!

Divya Sekar HT Tamil
May 09, 2023 12:18 PM IST

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

திண்டுக்கல் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய முதல்வர்
திண்டுக்கல் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய முதல்வர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று  காலை வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அத்துடன் பிளஸ் 2 தேர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ்,ஆங்கிலம் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.

எனது உயர்கல்விக்கு உதவுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்