TN Assembly 2024: ’தென் இந்தியா மீது தொங்கும் கத்தி!’ பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்!
”TN Assembly 2024: ’1971ஆம் ஆண்டு தமிழ்நாடும், பீகாரும் ஒரே அளவிலான மக்கள் தொகையை பெற்றிருந்ததால் மக்களவையில் திட்டதிட்ட ஒரே அளவிளான தொகுதி எண்ணிக்கையை கொண்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டை விட பீகாரின் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது”
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டப்பேரவையில் தினமும் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிக மோசமான எதேச்சதிகார எண்ணம் ஆகும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அரசியல் சட்டவிரோதம் ஆனது.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கலையுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா?
சில மாநிலங்களில் ஆட்சி கவிந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன் வந்து பதவி விலகுவார்களா? இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?
நாடாளுமன்றத் தேர்தல் கூட இந்தியா முழுக்க ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் உள்ளது. நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.
உள்ளாட்சி தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சி, அனைவருக்கும் சமவாய்ப்பு தரும் அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகிவிட கூடாது.
தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகும் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றனர். எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசை பெரும். மக்கள் தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்கு குறையக்கூடாது என்பதால் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.
தொகுதிகள் எண்ணிக்கையில் 2026 வரை மாற்றம் செய்யப்படாது என்றும், பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கைபடி தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
1971ஆம் ஆண்டு தமிழ்நாடும், பீகாரும் ஒரே அளவிலான மக்கள் தொகையை பெற்றிருந்ததால் மக்களவையில் திட்டதிட்ட ஒரே அளவிளான தொகுதி எண்ணிக்கையை கொண்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டை விட பீகாரின் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் வடமாநிலங்களை விட விகிதாச்சாரம் குறைந்துவிடும்.
தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் இருக்கும்போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தல் என்ன ஆகும். தமிழ்நாடு பலத்தையும் சக்தியும் இழந்து தமிழ்நாடு பின் தங்கிவிடும். தொகுதிகள் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்க கூடாது.
அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தொகுதி எண்ணிக்கையை இப்படியே தொடர செய்ய வேண்டும். மக்கள் தொகையை காரணம் காட்டி தென்னிந்திய மாநிலங்களில் வருவாய் குறைந்துவிட்டது.
டாபிக்ஸ்