தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Heavy Rain : மக்களே கவனமா இருங்க.. 13 மாவட்டங்களில் பலத்த மழை கொட்ட போகுது!

Heavy Rain : மக்களே கவனமா இருங்க.. 13 மாவட்டங்களில் பலத்த மழை கொட்ட போகுது!

Divya Sekar HT Tamil
Oct 30, 2023 11:18 AM IST

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை (கோப்புபடம்)
கனமழை (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கள், மதுரை, விருதுநகர், தூந்துக்குடி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வஞ்சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையில் நந்தனம் அசோக் நகர், அண்ணா சாலை ,சைதாப்பேட்டை ,மந்தவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அத்துடன் எம் ஆர் சி நகர் , பட்டினம் பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை சூழல் நிலவுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்