தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thirumavalavan On Bjp: தாமரை மலராது! ஜூன் 4 ஆம் தேதி ட்விஸ்ட் இருக்கு! அடித்து சொல்லும் திருமாவளவன்!

Thirumavalavan on BJP: தாமரை மலராது! ஜூன் 4 ஆம் தேதி ட்விஸ்ட் இருக்கு! அடித்து சொல்லும் திருமாவளவன்!

Kathiravan V HT Tamil
Jun 02, 2024 02:09 PM IST

Thirumavalavan on BJP: தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. 40 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

தாமரை மலராது! ஜூன் 4 ஆம் தேதி ட்விஸ்ட் இருக்கு! அடித்து சொல்லும் திருமாவளவன்!
தாமரை மலராது! ஜூன் 4 ஆம் தேதி ட்விஸ்ட் இருக்கு! அடித்து சொல்லும் திருமாவளவன்!

ட்ரெண்டிங் செய்திகள்

போராளியாக வாழ்ந்தவர் கலைஞர் 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் சேகர்பாபு அவர்கள் எதையும் திறம்பட செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயலாற்றக் கூடியவர். கடந்த ஆண்டு தளபதி ஸ்டாலின் அவர்களின் வாழ்கை வரலாற்றையும் அவர் தொகுத்து இருந்தது பெரும் வியப்பை அளித்தது. கலைஞரின் 80 ஆண்டுகால பொதுப்பணியை இளம் தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் இந்த கண்காட்சியகம் உருவாக்கப்பட்டு உள்ளது. கலைஞர் ஒரு போராளியாக பிறந்து, போராளியாக  மறைந்தார். விமர்சனங்கள், அவதூறுகளை கடந்து தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கல்வி, சுகாதாரத்தளங்களில் சாதித்து உள்ள சாதனைக்கும், வளர்ச்சிக்கும் அனைத்து அடித்தளங்களையும் அமைத்து அதற்கான பங்களிப்பை ஆற்றியவர் கலைஞர் அவர்கள் என்று திருமாவளவன் கூறினார். 

கேள்வி:- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளதே?

கருத்து கணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை, கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது என்று உங்கள் கேள்வியிலேயே இருக்கின்றது. ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்படுகின்றது என்பதை நாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். ஊடகங்கள் 10 ஆண்டு கால இருண்ட ஆட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் இதற்கு ஒரு முடிவு தெரியும், மக்கள் எழுதிய தீர்ப்பு ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தியாவை சூழ்ந்த இருள் அகல உள்ளது, புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான புதிய விடியலாக ஜூன் 4ஆம் தேதி இருக்கும். இந்தியா கூட்டணி வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் திமுக மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும்,

கேள்வி:- தமிழ்நாட்டிலும் ஒரிரு இடங்களில் தாமரை மலரும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதே?

அதற்கு வாய்ப்பே இல்லை; தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. 40 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். 

இந்தியா கூட்டணி ஜனநாயகத்தை காக்க உருவாகி உள்ள ஒரு மித்த கட்சிகளின் ஒரு அணி. தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதிலும் ஜனநாயக பூர்வ புரிதல் இந்த கூட்டணிக்கு உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்போம். 

கேள்வி:- ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திருமாவளவனின் கருத்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்படுமா? 

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பதை நானாக சொன்ன கருத்து அல்ல, அது பிரதமர் சொல்லி விமர்சனம் செய்த கருத்து அது. ஆனால் அதில் ஒரு உண்மையை அவர் ஒப்பு கொண்டு உள்ளார். இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது. ஆட்சி அமைக்கப்போகிறது, பிரதமரை உருவாக்க போகிறார்கள் என்ற உண்மையை பிரதமரே ஒப்புக் கொண்டு உள்ளார். ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று மோடி கிண்டல் அடித்த நிலையில், அப்படி இருந்தால் ஒன்றும் தவறு இல்லை என்றுதான் நான் சொன்னேன். 

டி20 உலகக் கோப்பை 2024