தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Minister Sekar Babu Meet To Press With Dayanidhi Maran

Sekar Babu: நோட்டாவுடன் போட்டி போடும் பாஜக திமுகவை பற்றி பேசுவதா? - அமைச்சர் சேகர் பாபு காட்டம்!

Mar 27, 2024 05:19 PM IST Karthikeyan S
Mar 27, 2024 05:19 PM IST
  • திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் தயாநிதி மாறனுடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "நோட்டாவுடன் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களின் பணியை பேசக்கூடாது. தயாநிதி மாறன் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து மக்கள் பணியாற்றியுள்ளார். திமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை. உழைப்பாளர்கள் பாட்டாளிகள் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி களத்தில் நிற்கும் ஒரே இயக்கம் திமுக. தமிழகத்தில் போட்டி இந்தியா கூட்டணியுடன் அல்ல. இந்தியா கூட்டணிக்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்பதுதான் தற்போது போட்டி." என தெரிவித்தார்.
More