தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prakash Raj: ‘2 வருஷம் கலைஞர் கூடவே இருந்து படிச்சேன்; அவர மாதிரி ஒருத்தர்.. மோடி ஆடியன்ஸ் அங்கதான்’ - பிரகாஷ்ராஜ்

Prakash Raj: ‘2 வருஷம் கலைஞர் கூடவே இருந்து படிச்சேன்; அவர மாதிரி ஒருத்தர்.. மோடி ஆடியன்ஸ் அங்கதான்’ - பிரகாஷ்ராஜ்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2024 04:06 PM IST

Prakash Raj: இருவர் பட கேரக்டருக்காக 2 வருஷம் கலைஞர் கூடவே இருந்து படிச்சேன். அவர மாதிரி ஒருத்தர பார்க்க முடியாது.” - பிரகாஷ்ராஜ்

Prakash Raj: ‘2 வருஷம் கலைஞர் கூடவே இருந்து படிச்சேன்; அவர மாதிரி ஒருத்தர்.. மோடி ஆடியன்ஸ் அங்கதான்’ - பிரகாஷ்ராஜ்
Prakash Raj: ‘2 வருஷம் கலைஞர் கூடவே இருந்து படிச்சேன்; அவர மாதிரி ஒருத்தர்.. மோடி ஆடியன்ஸ் அங்கதான்’ - பிரகாஷ்ராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

இருவர் படத்தில் கருணாநிதி கேரக்டரில் 

அவர் பேசும் போது, “இருவர் படம் நடித்து 28 வருடங்கள் ஆகின்றது. 30 ஆண்டு காலம் முன்பாக தமிழகத்திற்கு வந்த போது, எனது மனதில் இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். நான் இருவர் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அவரை கதாபாத்திரத்தில் பிரதிபலிக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. நான் கர்நாடகாவில் இருந்து வந்தவன். ஆகையால் அவரது தமிழ் உச்சரிப்பை முதலில் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அதன் மூலமாக என்னால் அவரை தெரிந்து கொள்ள முடிந்தது. படிக்க முடிந்தது.

அண்மையில் கூட ஒரு பேட்டியில் ஜாதி அரசியல் குறித்து நீங்கள் பேசுவீர்கள் என்று சொன்னார்கள் என்று ஒருவர் கேட்டதற்கு, கலைஞர் இருந்திருந்தால், நான் அதைப்பற்றி பேச வேண்டிய தேவையே வந்திருக்காது என்று கூறினேன். அவர் இருந்த வரைக்கும் எவனாலும் இங்கு வாலட்ட முடியவில்லை. அந்த படத்தில் தண்டவாளத்தில் படுத்திருப்பது போன்ற காட்சி ஒன்று வரும். அதில் நான் படுத்திருக்கும் போது எனக்கு வேர்த்து விட்டது. ஆனால் ஒருவர் உண்மையிலேயே நிஜ வாழ்க்கையில் செய்திருக்கிறாரே என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது. 

மோடி தியானம் குறித்து 

நான் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். அங்கு நிறைய மக்கள் வருவார்கள். ஆனால் மோடி, அவருக்கான ரசிகர்களை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார். அவரே ஸ்டோரி, ஸ்கீரின்ப்ளே, டயலாக் என எல்லாவற்றையும் செய்து கொள்கிறார். தமிழ்நாட்டில் முன்னதாகவே அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இந்தியாவிலும் அவரை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். மக்களும் அனுப்ப வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொல்கிறார்கள். நானும் அவரை அனுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தேர்தலில் எதிர்கட்சி ஜெயிக்காது. ஆளும் கட்சிதான் தோற்றுப்போகும். அவர் ஏற்கனவே தான் தோற்பதற்கான வேலைகள் செய்து விட்டார்.” என்று பேசினார்

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், கடந்த மே மாதம் 30ஆம் தேதி அன்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தனது தியானத்தை தொடங்கினார்.  

கடந்த மூன்று நாட்களாக இருந்து வந்த தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நிறைவு செய்து உள்ளார். தனது 45 மணி நேர தியானம் நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரது இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருப்பது கவனிக்கத்தக்கது. 

 தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்