தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thirumavalavan On Pm Modi: ’ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை!’ மோடிக்கு திருமாவளவன் பதில்!

Thirumavalavan On PM Modi: ’ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை!’ மோடிக்கு திருமாவளவன் பதில்!

Kathiravan V HT Tamil
May 26, 2024 08:01 PM IST

Thirumavalavan: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என மோடி சொல்வது ஒரு வகையில் அதை ஏற்றுக் கொள்கிறேன், ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பதில் என்ன தவறு என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்

’ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை!’ மோடிக்கு திருமாவளவன் பதில்!
’ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை!’ மோடிக்கு திருமாவளவன் பதில்!

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் நடைபெற்ற ஓபிசி கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்குவங்கியாக பயன்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. இந்த சூழலில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, சிறுபான்மையினர் ஒற்றுமை என்பது முக்கியமானது. இடஒதுக்கீட்டுக்கும், சமூகநீதி கோட்பாட்டுக்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து இந்த நாட்டையும், சமூகநீதி கோட்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். 

ஓபிசி சமூக இடஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கான்ஷிராம், வி.பி.மண்டல் ஆகியோரை நாம் மறந்துவிடக்கூடாது. 

இந்த தேர்தலில் மக்கள் சமூகநீதியின் பக்கமே நிற்கிறார்கள். சமூகநீதிக்கு ஆதரவானவர்கள், சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்ற அடிப்படையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்து உள்ளதாக நான் கருதுகிறேன். எனவே அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான பாசிச சக்திகள் வீழ்த்தப்பட்டுவார்கள். அரசமைப்பு சட்டத்தை ஆதரிக்க கூடிய வகையில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்து உள்ளனர். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். 

ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும், நம்முடைய பிரதமர் ஆற்றும் உரை மூலம் மக்கள் யாருக்கு வாக்கு அளித்து உள்ளனர் என்பதை உணர முடிகிறது. அவர் அண்மை காலமாக பேசி வரும் கருத்துகள் மூலம் பிரதமர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இந்து சமூகத்தினரின் தாலிகளை பறித்து முஸ்லீம்களிடம் காங்கிரஸ் கூட்டணி ஒப்படைத்துவிடுவார்கள், ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று சொன்னதும் சரி, அமித்ஷா போன்றோர் பேசும் கருத்துக்களும் சரி, ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளார்கள், மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது. 

வரும் ஜூன் 4ஆம் தேதி வர உள்ள தேர்தல் முடிவுகள் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நான் நம்புகிறேன். 

கேள்வி:- ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக பிரதமர் மோடி உள்ளாரே?

மதவாதத்தை பேசி மக்களிடம் ஆதரவை பெற முடியாத நிலையில், அவர்கள் இனவாதத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். ஒடிசாவில் அவர்கள் பேசும்  இனவாத அரசியல் எடுபடாது. நவீன் பட்நாயக் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்துக் கொண்டே அவருக்கு எதிரான அரசியல் முடிவை பாஜக எடுத்துக் கொண்டு வருகிறது.  அதுவும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மனதில் வைத்து பேசுவது அபத்தமானது, அயோக்கியத்தனமனது. 

கேள்வி:- இந்தியா கூட்டணியில் இலக்கு இல்லை; குழப்பம் உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளாரே?

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என மோடி சொல்வது ஒரு வகையில் அதை ஏற்றுக் கொள்கிறேன், ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பதில் என்ன தவறு, இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு கருத்தை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் சரியாக இருக்கும். 

டி20 உலகக் கோப்பை 2024