தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ’சிறையில் செந்தில் பாலாஜி! நாளையோடு ஒராண்டு! முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா! விளாசும் அண்ணாமலை!

BJP: ’சிறையில் செந்தில் பாலாஜி! நாளையோடு ஒராண்டு! முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா! விளாசும் அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 04:46 PM IST

Annamalai Criticizes DMK's Mupperum Vizha: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, கடந்த ஆண்டு அதே ஜூன் 14 நாளில்தான் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன் என அண்ணாமலை கூறி உள்ளார்.

BJP: ’சிறையில் செந்தில் பாலாஜி! நாளையோடு ஒராண்டு! முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா! விளாசும் அண்ணாமலை!
BJP: ’சிறையில் செந்தில் பாலாஜி! நாளையோடு ஒராண்டு! முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா! விளாசும் அண்ணாமலை!

கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். 

முப்பெரும் விழாவா? நாற்பெரும் விழாவா?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் வரும் ஜூன் 15 அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். முதலில், ஜூன் 14 அன்று நடத்தவிருப்பதாக முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், திமுக முன்னாள் இலாகா இல்லாத அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, கடந்த ஆண்டு அதே ஜூன் 14 நாளில்தான் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.