Savukku Shankar Vs Senthil Balaji : சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!
Savukku Shankar Vs Senthil Balaji : கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Savukku Shankar Vs Senthil Balaji: கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் பிரச்சனை குறித்து அன்றே முடிவு எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன் வைத்து வந்தார். இதில் பெரும்பாலானவை சர்ச்சையான கருத்துகளாகவே இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியோரை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார்
இதற்கிடையில் சவுக்கு சங்கர், தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
ஒரு லட்சம் அபராதம்
ஆனால் இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு இடைக்காலத் தடை உத்தரவை மீறி அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இனி கருத்துகளை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சவுக்கு சங்கர் அபராதத்தொகையை செலுத்த வில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வரும் ஜூலை 9ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு
இந்நிலையில் யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர். அடுத்தடுத்து அவர் மீது சென்னை, மதுரை, திருச்சி சேலம் என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புகாரின் அடிப்படயில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பாலாஜியும் நீதிபதி சுவாமி நாதனும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார். ஆட்கொணர்வு மனு மீது மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 3 ஆவது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதைடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்