தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அறநிலையத்துறையில் இவ்வுளவு கோடி முறைகேடா? அதிமுக ஆட்சியை விளாசிய அண்ணாமலை

அறநிலையத்துறையில் இவ்வுளவு கோடி முறைகேடா? அதிமுக ஆட்சியை விளாசிய அண்ணாமலை

Kathiravan V HT Tamil
Jan 21, 2023 10:06 PM IST

கண்டன உரையில் அண்ணாமலை குறிப்பிட்ட 2018 முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்

ட்ரெண்டிங் செய்திகள்

காவியும் காவியுமாக சுற்றும் சேகர்பாபு

என்ன தைரியத்தில் அறநிலையத்துறையை வைத்து கொண்டு எதற்காக அமைச்சர் சேகர்பாபு, வெள்ளையும் சொள்ளையுமாகவும், காவியும் காவியுமாகவும் காலையில் இருந்து மாலை வரை சுற்றுகிறார் என்பது தெரியவில்லை. கழிவறை ஏலத்திற்கான காசு, பக்தர்களுக்கு சாப்பிடும் வெண்ணை முறுக்கு, மிக்ஸருக்கான பணம், மதுரை கோயிலில் இருந்து இனோவா காரை காணவில்லை. இந்த சம்பவங்களை வைத்து பேச வேண்டும் என்றால் தமிழகத்திற்கு தேவையில்லாத ஆணியாக அறநிலையத்துறை உள்ளது.

சூறையாடப்படும் மரபுகள்

திருக்கோயில்கள் நிலங்கள் சூறையாடப்பட்டு மரபுகள் மீறப்படுகிறது, கணக்கில்லாமல் கோயில்கள் இடிக்கப்படுகிறது. புராதாண கோயில்களின் நகைகள் உருக்கப்படுகிறது, பக்தர்களின் காணிக்கைகள் திருடப்படுகிறது. 6 கால பூஜைகள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகை தடுக்கப்படுகிறது, கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தப்படுகிறது. பழனி கோயிலில் போராட்டம் நடத்திய பிறகுதான் கும்பாபிஷேகத்திற்கான தேதி அறிவிக்கப்படுள்ளது.

தணிக்கையில் முறைகேடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 2018இல் 19 கோடியும், 2019இல் 20 கோடியும், 2021இல் 21 கோடியும் தணிக்கை பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த தணிக்கை பணிகளுக்காக கோயில்களில் இருந்து 2018இல் 92 கோடியும், 2019இல் 87 கோடியும், 2021இல் 70 கோடியும் என கணக்கு காண்பிக்கப்பட்டதை விட நான் மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது. அண்ணாமலை குறிப்பிட்ட 2018 முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்