Kallakurichi: பேரவையில் பாமக கருப்பு சட்டை! பாஜக வெள்ளை சட்டை! கூட்டணியில் பிளவா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi: பேரவையில் பாமக கருப்பு சட்டை! பாஜக வெள்ளை சட்டை! கூட்டணியில் பிளவா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

Kallakurichi: பேரவையில் பாமக கருப்பு சட்டை! பாஜக வெள்ளை சட்டை! கூட்டணியில் பிளவா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Jun 21, 2024 12:33 PM IST

Kallakurichi Liquor Deaths: சட்டப்பேரவைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வராததால் சர்ச்சை

Kallakurichi: பேரவையில் பாமக கருப்பு சட்டை! பாஜக வெள்ளை சட்டை! கூட்டணியில் பிளவா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
Kallakurichi: பேரவையில் பாமக கருப்பு சட்டை! பாஜக வெள்ளை சட்டை! கூட்டணியில் பிளவா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கூடிய சட்டப் பேரவையில் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கும், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் எழுந்த கள்ளக்குறிச்சி பிரச்னை

இந்த நிலையில், இன்றைய தினம் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தொடங்கியபோது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து கோரிக்கை வைத்தனார். ஆனால் கேள்வி நேரத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிப்பதாக சபாநாயகர் கூறினார். 

அதிமுகவினர் அமளி! வெளியேற்றம்!

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுவினர், அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலககோரி பதாகைகளை காட்டி கோஷம் எழுப்பியதால், சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். 

பாஜகவினர் வெளிநடப்பு 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்திற்கு பின் பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

நயினார் நாகேந்திரன் பேட்டி 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திமுக அரசு வந்த பிறகு எல்லா இடங்களிலும் விஷ சாராய சாவு  நடந்து வருகின்றது. கள்ளக்குறிச்சியில் இதுவரை 50 பேர் இறந்து உள்ளனர். 115 பேர் மருத்துவனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 70 பேர் உயிரிழந்து உள்ளனர். 

திமுக அரசு வந்த பிறகு எல்லா இடங்களிலும் விஷ சாராய சாவு எல்லா இடத்திலும் நடக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார். இதனை கட்டுப்படுத்த சொல்லி நாங்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து உள்ளோம். 

ஆனால் திமுக கூட்டணி கட்சித் தோழர்கள், இது போல் குஜாராத் மாநிலத்திலும், கடலூரிலும் நடந்து உள்ளதாக கூறி பூசி மொழுகி பேசுகின்றனர் என நயினார் நாகேந்திரன் கூறினார். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் ஏன் கருப்பு சட்டை அணியவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”சட்டை போடுவதெல்லாம் ஒரு காரணமா? எனக்கு கருப்பு சட்டை இல்லாததால் நான் போடவில்லை. இருந்தால் போட்டுவந்து இருப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.