தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்! கருப்பு சட்டையுடன் அதிமுக! பரபரப்பாக கூடும் சட்டப்பேரவை!

TN Assembly: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்! கருப்பு சட்டையுடன் அதிமுக! பரபரப்பாக கூடும் சட்டப்பேரவை!

Kathiravan V HT Tamil
Jun 21, 2024 09:47 AM IST

Kallakurichi liquor Deaths: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண சம்பவங்களை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து உள்ளனர்.

TN Assembly: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்! கருப்பு சட்டையுடன் அதிமுக! பரபரப்பாக கூடும் சட்டப்பேரவை!
TN Assembly: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்! கருப்பு சட்டையுடன் அதிமுக! பரபரப்பாக கூடும் சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கூடிய சட்டப் பேரவையில் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கும், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை கூடுகின்றது.

நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோ இதுவரை உயிரிழந்து உள்ளனர். 60க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண சம்பவங்களை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து உள்ளனர். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 45 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.