தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai High Court: 'குஜராத் மாணவி மதுரையில் பாலியல் தொல்லை'-ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

Madurai High Court: 'குஜராத் மாணவி மதுரையில் பாலியல் தொல்லை'-ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

Pandeeswari Gurusamy HT Tamil
May 06, 2023 11:45 AM IST

Madurai Crime:மாணவர் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை இருவேளை கையெழுத்து போட வேண்டும்

Madurai High Court
Madurai High Court

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச.,17, 18ல்  சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதற்காக மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

இதே விடுதியில் மாணவிக்கு அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின்(22), காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் (22 )ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர்.

இரண்டு நண்பர்களும் கட்டாயப்படுத்தி மாணவியோடு பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இது குறித்து மாணவி குஜராத் சென்ற பின்பு ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார் புகாரில் இரண்டு மாணவர்களையும் மதுரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஜெரோம் கதிரவன் தனக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்றதாகவும் மாணவி ஏப்ரல் 23 ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார் புகாரில் முகாந்திரம் இல்லை பொய்யான புகார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி மாணவன் ஜெரோம் கதிரவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார் மேலும் மாணவர் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை இருவேளை கையெழுத்து போட வேண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது நீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமென நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்