தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Seeman: சீமான் எங்கு பேட்டியிட்டாலும் தோற்க தானே போகிறார்- அண்ணாமலை நக்கல்

Annamalai Vs seeman: சீமான் எங்கு பேட்டியிட்டாலும் தோற்க தானே போகிறார்- அண்ணாமலை நக்கல்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2023 11:22 AM IST

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் தோக்க தானே போகிறார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சீமான் - அண்ணாமலை
சீமான் - அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு விழாவில் உரையாற்றினார். பின்னர் நொய்யல் ஆராத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் நாடாளுடன்ற தேர்லில் பிரதமர் மோடி தமிழகத்தில் நின்றால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏன் என்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை வாரணாசி தொகுதியில் சீமான் மோடியை எதிர்த்து நிற்க தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். அவர் வாயுள்ளது பேசுகிறார். எந்த ஊருக்கு போகிறோம் என்று வழி தெரிந்தால் கடினம் ஆனால் எந்த ஊருக்கு போகிறோம் என்பதே தெரியவில்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் தானே, சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?.

மோடி வாரணாசியில் போட்டியிட்டு அதனை அடிப்படையில் இருந்து மாற்றி விட்டார். தமிழகத்தில் ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமர் இங்கு நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். 

திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்