தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Ttv: 'ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்தலாம்' டிடிவி பேட்டி

EPS Vs TTV: 'ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்தலாம்' டிடிவி பேட்டி

Kathiravan V HT Tamil
Feb 24, 2023 11:35 AM IST

”2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், அதை தடுக்க வேண்டும் என்பதற்காக சில நல்ல உள்ளங்கள் என்னை அணுகியபோது நான் சரி என்று சொன்னேன்”

செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

ட்ரெண்டிங் செய்திகள்

வட்டாரக் கட்சியாக மாறிய அதிமுக

பழனிசாமி ஒரு சுயநலவாதி என்பதை உணர்ந்து அங்கிருப்பவர்கள் எல்லாம் எங்களுடன் வந்து இணைவார்கள் என்பது உண்மை, மத்திய அரசின் உதவி இருந்தால் குப்பனும், சுப்பனும் கூட முதலமைச்சர் பதவியில் தொடர முடியும்.

தீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதற்கு பழனிசாமியின் ஆணவமும், அகங்காரமும், பணத்திமுரும்தான் காரணம். பழனிசாமி அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாகவும், வட்டாரக் கட்சியாகவுமே மாற்றிவிட்டார்.

வன்னியர்களை ஏமாற்றிய ஈபிஎஸ்

அவர் செய்த அரசியல் தவறுகளால் தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாது சூழல் உள்ளது. தேவர் என்பவர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவர், அவர் வரமுடியாதாதற்கு காரணம் ஆட்சியில் இருந்த போது ஈபிஎஸ் செய்த அரசியல் தவறு

தான் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்பதால் வன்னிய சமுதாய மக்களை ஏமாற்றிய காரணத்தால் அவரால் தெற்கில் சோபிக்க முடியவில்லை. அவருடன் இருப்பவர்கள் எல்லாம் டெண்டர் பார்ட்டிகள், தொண்டர்கள் கிடையாது.

சகோதர சமூகங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கியவர்

அவர் சொல்லும் ஒரு சிலரை சந்திக்க அச்சம் இருக்கலாம், டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை என்று அவர் சொல்கிறார். இவருக்கு ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும் இவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லையே. ஈரோடு கிழக்கிலும் என்னத்தான் தம்பட்டம் அடித்து பணம் செலவு செய்தாலும் வெல்ல முடியாது.

அவரோடு இருந்த பாமக, தேமுதிக இல்லை, பாமக விழித்துக் கொண்டது. அவரோடு சேர்ந்தால் நமக்கு பாதிப்பு வரும் என்று. 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்து சகோதரர்களாக வாழ்ந்த சமூகங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கி பார்த்தார் ஈபிஎஸ். மக்கள் தொகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதன்படி இடஒதுக்கீடு செய்தால் எல்லோரும் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள்.

ஈபிஎஸ்க்கு தற்காலிக வெற்றிதான்

நீதிமன்றம் கூட சின்னத்தை தற்காலிகமாக கொடுத்து இருக்கலாம், இந்த சுற்றில் ஈபிஎஸ் வென்று உள்ளார் அவ்வுளவுத்தான். பொதுக்குழு செல்லும் என்று சொன்ன உச்சநீதிமன்றத்தின் வார்த்தையை தவிர வேறு எதிலும் அவர்களுக்கு பலனில்லை; இது ஒரு தற்காலிக வெற்றிதான்.

அம்மாவின் உண்மையான தொண்டர்களாக உள்ளவர்கள் அனைவரும் இணைந்து கூட்டணியாக செயல்பட்டால்தான் வெல்ல முடியும் என்பது எதார்த்த உண்மை. அதை அம்மாவின் உண்மையான தொண்டர்களாக உணர்பவர்கள் எங்களோடு இணைந்து வருவார்கள்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்தேன்

2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், அதை தடுக்க வேண்டும் என்பதற்காக சில நல்ல உள்ளங்கள் என்னை அணுகியபோது நான் சரி என்று சொன்னேன். நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை; எங்கள் கட்சிக்கு 40 சீட் கொடுங்க நாங்கள் வருகிறோம் என்று சொன்னோம். ஆனால் அன்று ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்த திமிரில், மமதையில், இவர்களுக்கு துரோகம் செய்துவிட்டோமே இவர்கள் வந்தால் நமக்கு சரி இருக்காது என்பதால் ஒருவர் எடுத்த தவறான முடிவால் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்காது. அம்மா ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிப்போம், சுவாசம் உள்ளவரை போராடுவோம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்