தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ’ராஜபாளையத்திற்கு நாய் பேமஸ்! வந்தவாசிக்கு பாய் பேமஸ்!’ திமுக எம்.எல்.ஏ பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

TN Assembly: ’ராஜபாளையத்திற்கு நாய் பேமஸ்! வந்தவாசிக்கு பாய் பேமஸ்!’ திமுக எம்.எல்.ஏ பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Oct 10, 2023 10:50 AM IST

”வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது”

ராஜபாளையம் நாய் மற்றும் வந்தவாசி பாயை ஒப்பீடு செய்து வந்தவாசி திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் பேரவையில் பேசினார்.
ராஜபாளையம் நாய் மற்றும் வந்தவாசி பாயை ஒப்பீடு செய்து வந்தவாசி திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் பேரவையில் பேசினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் தொடங்கிய கேள்வி நேரத்தின் போது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசுகையில், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! ராஜபாளையத்திற்கு நாய் பேமஸ் என்றால் வந்தவாசிக்கு பாய் பேமஸ்! அப்படிபட்ட பாய் நெசவாளர்கள் வந்தவாசியில் சிறு தொழிலாளாக பலநூறு ஆண்டுகளாக செய்து வரும் காரணத்தால் அங்கு பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு மறு பரிசீலனை செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கோரை பாய்கள் காதி கிராப்ட் மூலம் அரசு மருத்துவமனைகள், சிறைத்துறை, அரசு போக்குவரத்து கழகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வந்தவாசி தொகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்கள் ஒன்று சேர்ந்து புதியதாக தொழில் கூட்டுறவு சங்கம் அமைக்க விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம் மூலம் தொழிற்சங்கம் பதிவு செய்து பாய் நெய்வோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். நம்முடைய ஆட்சியில்தான் கதர்துறை 228 கோடியில் இருந்து 428 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய கூட்டுறவு சங்கத்திற்கு இடம் தரும்பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தொழிற்கூடம் ஒன்றை அமைக்க பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கீழ்பெண்ணாத்தூரில் உள்ள ஆவூர் கிராமத்தில் உள்ள பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை, தமிழ்நாட்டில் எங்கேயும் பாய் நெசவுப்பூங்கா இல்லாமல் உள்ளது. கண்டிப்பாக பாய் நெசவுப்பூங்கா அமைக்க அமைச்சர் முன் வருவரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மின்சாரத்துறைஅமைச்சரோடு கலந்து பேசி மின்சாரம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படும். பாய் தொடர்பான பொருட்கள் முறையாக சப்ளை செய்யப்படுகிறது. உங்கள் கோரிக்கையை நிச்சயாமாக பரிசீலிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்