தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadan: ‘சிறுபான்மையினர் நலனில் அதிமுகவுக்கு மிகுந்த அக்கறை உண்டு’ ஈபிஎஸ் ரமலான் வாழ்த்து!

Ramadan: ‘சிறுபான்மையினர் நலனில் அதிமுகவுக்கு மிகுந்த அக்கறை உண்டு’ ஈபிஎஸ் ரமலான் வாழ்த்து!

Kathiravan V HT Tamil
Apr 21, 2023 12:15 PM IST

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரமலான் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரமலான் வாழ்த்து

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீர்மிகுந்த ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமை ஆக்கியதன் நோக்கம், மனிதரை நல்லவராக விளங்கச் செய்வதே ஆகும். ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, ஏழைகளின் பசித் துன்பத்தைத் தாமும் உணர்ந்து, ஏழை, எளியோருக்கு உணவு அளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்திலும், பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்