தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk General Secretary Edappadi Palaniswami Met Home Minister Amit Shah In Delhi

EPS Met Amit Shah: அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ்! கூட்டணிக்கு பக்கா ஸ்கெட்ச்?

Kathiravan V HT Tamil
Apr 26, 2023 10:18 PM IST

நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடந்த ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடந்த ஆலோசனை

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட பின்னர் அமித்ஷா உடனான சந்திப்பு முதல்முறையாக நடைபெறுகிறது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும்., அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைப்பது, தொகுதி பங்கீட்டு விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்