தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Case: அதிமுக பொதுக்குழு விவகாரம்.. நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி- தேர்தல் ஆணையம்

ADMK Case: அதிமுக பொதுக்குழு விவகாரம்.. நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி- தேர்தல் ஆணையம்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 18, 2023 10:35 AM IST

அதிமுக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் கடந்த 2022ம் ஆண்டு அதிமுக தொடர்பான விதிகளை மாற்றி அமைத்ததை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராம் குமார், ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே கட்சி விதிகள் மாற்றத்தை அங்கீகரித்ததாக ஆணையம் பதில் அளித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூல வழக்குகளில் தீர்ப்பு வரும் என்றால் அதனை தேர்தல் ஆணையம் பின்பற்றும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தீர்ப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாறும் பட்சத்தில் அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point