தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hindu Rashtra : நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய இந்து மகாசபை தலைவர் வலியுறுத்தல்!

Hindu Rashtra : நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய இந்து மகாசபை தலைவர் வலியுறுத்தல்!

Divya Sekar HT Tamil
Aug 28, 2023 11:57 AM IST

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய இந்து மகாசபை தலைவர்
அகில இந்திய இந்து மகாசபை தலைவர்

ட்ரெண்டிங் செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெளி நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக பிரதமர் மோடி பயணம் செய்தார். பின்னர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரை அவர் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம் அளித்தார். சந்திரயான்-3 மிஷன் திட்ட இயக்குனர் வீரசக்திவேலை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என அழைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நிலையில் தற்போது நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்கு அவர் இதனை கோரிக்கையாக வைத்துள்ளதோடு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சக்ரபாணி மகராஜ் சமூக வலைதள பக்கத்தில், ``நிலவை இந்து சனாதன ராஷ்டிராவாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும். அதோடு, `சந்திரயான் 3' தரையிறங்கிய, சிவசக்தி பாயின்ட் எனப் பெயர்சூட்டப்பட்ட இடத்தை அதன் தலைநகராக உருவாக்க வேண்டும். எந்தப் பயங்கரவாதிகளும் அங்குச் செல்லமுடியாதபடி இந்திய அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்