தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை-கே.பி முனுசாமி திட்டவட்டம்

ADMK: எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை-கே.பி முனுசாமி திட்டவட்டம்

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 28, 2023 10:55 AM IST

2024 மற்றும் 2026 தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கே.பி.முனுசாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக மூத்த தலைவர் கே.பி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பேது அவர் கூறியதாவது,

கடந்த இருபத்தி ஐந்தாம் தேதி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக த்தின் தலைமை அலுவலகத்தில் கழகத்தின் பொதுச்செயலாளர் தலைமையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏற்கனவே எங்களோடு கூட்டணிகள் இருந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநிலத்தலைமை எங்கள் இயக்கத்தை பற்றியும் , எங்கள் இயக்க தலைவர்களை பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தினாலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை விமர்சனம் செய்வதை கண்டித்தும் கண்டன தீர்மானம் போடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரதிய ஜனநாயக கட்சியின் தேசிய தலைமை பேரறிஞர் அண்ணாவை பற்றியும், பொதுச்செயலாளர் பற்றியும் பல விமர்சனங்களை செய்தார்கள். அது உண்மைக்கு மாறாக இருந்த காரணத்தால் 2 கோடி தொண்டர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில்தான் கடந்த 25ந் தேதி மிக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து ஏக மனதாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த வெளியேற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஊடகங்களில் ஒரு சில மூத்த அரசியல் விமர்சகர்கள் நேரம் வரும்போது கூட்டு சேர்ந்து விடுவர் என்று மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.

நாங்கள் பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிய உடனே பயத்தின் காரணமாக ஸ்டாலின் அவர்களும் அவரது மகன் உதய நிதி ஸ்டாலின் அவர்களும் இவர்கள் நாடகம் நடத்துகின்றனர். நேரம் வந்தால் இணைந்து விடுவார்கள் என்றெல்லாம் மக்களை திசைதிருப்புகின்றனர். 

இதை முடிவுக்கு கொண்டு வரவே இந்த செய்தியாளர் சந்திப்பில், "எந்த காரணத்தை கொண்டும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏற்கனவே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கூட்டணியில் பாரதிய ஜனதாக கட்சி வெளியேற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 மற்றும் 2026 தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கே.பி.முனுசாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் "அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்