தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayabaskar: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Vijayabaskar: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 29, 2023 12:27 PM IST

மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்கள், இலப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவருக்கு சொந்தமான கல் குவாரி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை இரண்டு நாள்கள் நடைபெற்ற நிலையில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் உள்பட பல்வேறு விஷயங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து விஜயபாஸ்கர் மீது கடந்த 2021 அக்டோபரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து விஜய்பாஸ்கர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரூ.39. 79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஐந்தாம் தேதி நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரது மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்