தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime:’இதுக்கு மேல என்னால முடியாது’ கணவனை அம்மிக்கல்லை போட்டு கழுத்தை அறுத்து கொன்ற கர்ப்பிணி.. இறுதியில் விபரீத முடிவு!

Crime:’இதுக்கு மேல என்னால முடியாது’ கணவனை அம்மிக்கல்லை போட்டு கழுத்தை அறுத்து கொன்ற கர்ப்பிணி.. இறுதியில் விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil
Jun 10, 2023 07:51 AM IST

காஞ்சிபுரம் அருகே குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டையிட்டதால் கணவனை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு 6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தம்பதி
உயிரிழந்த தம்பதி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, சந்தானம் குடித்துவிட்டு வந்து மனைவி வேண்டாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேண்டா, ஆவேசத்துடன் அங்கு கிடந்த அம்மிக்கல்லை தூக்கி சந்தானத்தின் தலையில் ஓங்கி போட்டுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில், பலத்த படுகாயமடைந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட, மனைவி வேண்டா பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்தானத்திற்கு ஏற்கனவே முதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவரின் முதல் மனைவி சந்தானத்தின் உடன் பிறந்த அண்ணனுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சந்தானத்தை விட்டு சந்தானத்தின் அண்ணனுடன் கணவன் மனைவியாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், 2வதாக திருமணம் செய்துகொண்ட வேண்டா, இவரின் முதல் கணவர் இறந்துவிட்டதால், 2வதாக சந்தானத்துடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. மேலும் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்