தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர்.. மூடப்படாத கழிவுநீர் தொட்டியால் விபரீதம்!

அலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர்.. மூடப்படாத கழிவுநீர் தொட்டியால் விபரீதம்!

Divya Sekar HT Tamil
Jan 23, 2023 12:04 PM IST

Boy Died in Venkatapuram : வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூடப்படாத கழிவுநீர் தொட்டியால் விபரீதம்
மூடப்படாத கழிவுநீர் தொட்டியால் விபரீதம்

ட்ரெண்டிங் செய்திகள்

பக்கத்தில் சென்று இருப்பான் என எண்ணி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பிரதீஸ் வீடு திரும்பாததால் அவரது தந்தை சுற்றியுள்ள பகுதிகளில் மகனை தீவிரமாக தேடியுள்ளார்.

அப்போது ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த கழிவு நீர் தொட்டியில் சிறுவர் பிரதீஷ் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைபார்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவன் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

வெங்கடாபுரம் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டியை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே 6 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டினர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இதுகுறித்து விசாரித்து வெங்கடாபுரம் பஞ்சாயத்து செயலாளர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தங்களது கடமையில் அலட்சியம் காட்டியதற்காக அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் வெங்கடாபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து இது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு சப் கலெக்டர் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடாபுரம் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டியை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்