தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Theft : பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த 495 டயர்கள் கொள்ளை! காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்!

Chennai Theft : பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த 495 டயர்கள் கொள்ளை! காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்!

Karthikeyan S HT Tamil
Jun 25, 2023 01:25 PM IST

சென்னையில் இருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 495 டயர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த 495 டயர்கள் கொள்ளை
பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த 495 டயர்கள் கொள்ளை

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் டயர் உற்பத்தி செய்யும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டயர்கள் கண்டெய்னர் பாக்ஸ் மூலம் பொன்னேரி அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலில் ஏற்றப்பட்ட 1500 டயர்கள் அடங்கிய கண்டெய்னர் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டில் பரிசோதித்த போது அதில் டயர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக டயர் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டயர்களை ஏற்றுமதி செய்த முகவர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்ததில் லாரி தேவையில்லாமல் பல்வேறு இடங்களில் நின்று தாமதமாக காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து டயர் நிறுவன அதிகாரி நாராயணன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் சுப்பிரமணி உட்பட இருவரை கைது செய்தனர். விசாரணையில்,

பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இருந்து 8.29 லட்ச ரூபாய் மதிப்பிலான 495 டயர்கள் திருடு போனது தெரியவந்தது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு கண்டெய்னரில் கொண்டு சென்ற போது இந்த டயர்கள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என்பதால் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பிரேசிலுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட 495 டயர்கள் துறைமுகம் செல்லும் வழியில் நூதனமாக திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்