தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Plus 2 Exam Result: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்? - விபரம் இதோ!

Plus 2 Exam Result: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
May 08, 2023 11:31 AM IST

Plus 2 Exam Result: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 32,501 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

ட்ரெண்டிங் செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் நடந்து முடிந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (மே 8) காலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 32,501 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

முக்கியப் பாடங்களில் சென்டம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை விவரம்

  • தமிழ்-2
  • ஆங்கிலம்-15
  • இயற்பியல்-812
  • வேதியியல்-3909
  • கணக்குப் பதிவியல் - 6573
  • உயிரியல்-1494
  • கணிதம்-690
  • தாவரவியல்-340
  • விலங்கியல்-154
  • கணினி அறிவியல்-4618
  • வணிகவியல்-5678
  • கணக்குப் பதிவியல்-6573,
  • பொருளியல்-1760,
  • கணினிப் பயன்பாடுகள்-4051,
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..பயத்தை எப்படி கையாள்வது?

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்