தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12 Hour Workday Bill: 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்-எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்

12 Hour Workday Bill: 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்-எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்

Manigandan K T HT Tamil
May 04, 2023 10:40 AM IST

C.M.Stalin: மே தினத்தில் முதல்வர் ஸ்டாலின், 12 மணி நேர மசோதா திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்திருந்திருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு தலைமைச் செயலகம் (உள்படம்)
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு தலைமைச் செயலகம் (உள்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மே தினத்தில் முதல்வர் ஸ்டாலின், 12 மணி நேர மசோதா திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் கடந்த  மாதம் 24ஆம் தேதி 12 மணி நேரம் வேலைக்கு வழிவகுக்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி. கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தொழிற் சங்கங்களும் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தொழிற்சங்கங்கள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் எக்காரணத்தை கொண்டும் இந்த சட்டமானது ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர்.

மேலும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அமைச்சர்கள் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் மே 1 அன்று 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மசோதா வாபஸ் குறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எழுத்துப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்