தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  11 Districts Of Tamil Nadu Are Likely To Receive Light Rain Today

Today Rain Update : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம்!

Divya Sekar HT Tamil
Feb 05, 2023 08:44 AM IST

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு   -கோப்பு படம்
லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு -கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

டெல்டா மாவட்டங்களில் மழை அதிகம் பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாகபபட்டினம் மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்தது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளை கடுமையாக பாதித்து உள்ளது. பயிர்கள் பல நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன.

இந்நிலையில், இன்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

08.02.2023 - தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்