தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான திட்டங்கள்!என்ன சொல்கிறார் ரோஹித்

WTC Final:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான திட்டங்கள்!என்ன சொல்கிறார் ரோஹித்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 14, 2023 11:48 AM IST

Rohit Sharma on WTC Final: ஐபிஎல் தொடர் முடிவுற்ற அடுத்த இரண்டு வாரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அணியின் திட்டங்கள் குறித்து ரோஹித் ஷர்மா விவரித்துள்ளார்.

இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மா (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தொடரின் பெற்ற வெற்றியின் மூலம் ஜூன் 7ஆம் தேதி தொடங்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்ற நிலையில், ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் மோதிய இந்தியா தோல்வியை தழுவியது.

இதையடுத்து இந்தியா மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த முறை கோப்பையை வெற்றி பெற்றாக வேண்டிய முனைப்பில் வீரர்களை தயார்படுத்து பணியை தற்போதே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரோஹித் ஷர்மா கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறோம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவது எங்களுக்கு சிக்கலான ஒரு நிலைமைதான்.

இந்த போட்டியில் தேர்வாக இருக்கும் வீரர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதுடன், அவர்களின் பணிச்சுமையை கண்காணித்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுப்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவது மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடர் மே 21ஆம் தேதியில் லீக் போட்டிகள் முடிந்துவிடும். எனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற 4 அணிகள் தவிர எஞ்சியுள்ள 6 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

அந்த நேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி விளையாடும் அணித்தேர்வுக்கு தயாராக இருக்கும் வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தயார்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்.

அத்தோடு இல்லாமல் ஐபிஎல் தொடருக்கு இடையில் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டியுக் பந்தை (இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் பந்து) வைத்து பயிற்சி மேற்கொள்ள வைக்கவுள்ளோம்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உலகம் முழுவதும் ஏராலமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நிலவும் சீதோஷண நிலை புதுமையாக இருக்காது.

அ்தேசமயம் இரு அணிகளுக்கும் சொந்த மண்ணில் விளையாடுவதுபோல் இல்லாமல் வித்தியாசமாகத்தான் இருக்கும். அதற்கு தகுந்தபடி தயாராவோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று கோப்பையை தக்க வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. வழக்கத்துக்கு மாறாக இது மிகவும் கடினமான தொடராக இருந்தது.

அணியில் சில முக்கியமான வீரர்கள் இல்லாவிட்டாலும் கூட சாதித்து இருக்கிறோம். வீரர்களின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது. விராட் கோலி உடல்நலக்குறைவோடு இந்த இன்னிங்சை பொறுமையுடன் விளையாடினார். அவருக்கு கொஞ்சம் இருமல் இருந்தது. மற்றபடி மோசமான உடல்நலப்பிரச்னை ஏதும் இல்லை.

WhatsApp channel

டாபிக்ஸ்