தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sports Ministry Suspends Wfi: கடும் எதிர்ப்பு எதிரொலியா..?-இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய அரசு

Sports Ministry suspends WFI: கடும் எதிர்ப்பு எதிரொலியா..?-இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய அரசு

Manigandan K T HT Tamil
Dec 24, 2023 11:59 AM IST

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சஞ்சய் சிங்குடன் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்,
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சஞ்சய் சிங்குடன் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

தேசிய அளவில் பங்கேற்கவுள்ள மல்யுத்த வீரர்களுக்கு போதிய முன்னறிவிப்பு வழங்காமல், இந்த அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக சஞ்சய் சிங் அறியப்படுகிறார். தாமதமான தேர்தலில் சஞ்சய் சிங் அதிக வாக்குகளைப் பெற்றதால் பூஷண் மல்யுத்த சம்மேளனத்தின் மீது மறைமுக கட்டுப்பாட்டைப் பெற்றார். மேற்குறிப்பிட்ட போட்டிகளின் சமீபத்திய அறிவிப்புகளும் டபிள்யூ.எஃப்.ஐ.யின் அரசியலமைப்பின் விதிகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

"அத்தகைய முடிவுகளை நிர்வாகக் குழு எடுக்க வேண்டும், அதற்கு முன்பு நிகழ்ச்சி நிரல்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட வேண்டும். கூட்டங்களுக்கான அறிவிப்புகள்' என்ற தலைப்பின் கீழ் டபிள்யூ.எஃப்.ஐ அரசியலமைப்பின் பதினொன்றாம் பிரிவின்படி, கூட்டத்திற்கான குறைந்தபட்ச அறிவிப்பு காலம் 15 தெளிவான நாட்கள் மற்றும் கோரம் பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். அவசர தேர்தல் ஆணையக் கூட்டத்திற்கு கூட, குறைந்தபட்ச அறிவிப்பு காலம் 7 தெளிவான நாட்கள் ஆகும், மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதிகளின் ஆதரவு தேவை" என்று அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதன் எதிரொலியாக “மல்யுத்தத்திலிருந்து விலகுகிறேன்” என்று ஒலிம்பிக் வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்