தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sachin Tendulkar: அடுப்பூதிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்..மகிழ்வென்பது யாதெனில்…!

Sachin Tendulkar: அடுப்பூதிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்..மகிழ்வென்பது யாதெனில்…!

Pandeeswari Gurusamy HT Tamil
May 06, 2023 10:38 AM IST

அர்ஜுன் ஐபிஎல்லில் பிஸியாக இருப்பதால் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" - சச்சின்

குடும்பத்துடன் சமைத்த சச்சின் டென்டுல்கர்
குடும்பத்துடன் சமைத்த சச்சின் டென்டுல்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

இளம் வயதிலேயே சுட்டித்தனமாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் தான் உலகம். இவரது திறமையைக் கண்ட சகோதரர் மும்பையில் புகழ்பெற்ற பயிற்சியாளரான அச்ரேக்கரிடம் சேர்த்துள்ளார். 14 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கியவர். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை இந்திய கிரிக்கெட் உலகத்தை தன்வசப்படுத்த உழைத்துக்கொண்டே இருந்தார். அந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த கோப்பை சச்சினுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

எனக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய வெகுமதி என்னவென்றால் சச்சின் சச்சின் என்று மைதானத்தில் ரசிகர்கள் என் பெயரைச் சொல்வது தான் என ஒரு பேட்டியில் சச்சின் கூறி இருக்கிறார்.

ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உட்படச் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

மும்பையில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அன்று பிறந்தார் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில் தனது 50 வது பிறந்த நாளை சச்சின் டெண்டுல்கர் கொண்டாடினார். உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகவும் எளிமையாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அந்த பதிவில், தேநீர் நேரம், 50 நாட் அவுட் என பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தன் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை சச்சின் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் வெளியின புகைப்படத்தில் சச்சின் விறகு அடிப்பில் தனது குடும்பத்தினருடன் சமையலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதில், ‘நீங்கள் வாழ்க்கையில் அரை நூற்றாண்டை அடைவது ஒவ்வொரு நாளும் அல்ல. அது நடக்கும் போது, ​​மிகவும் முக்கியமானவர்களுடன் கொண்டாடுவது சிறப்பு. சமீபத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் 50வது சிறப்பு பிறந்த தின விழாவை எனது குழு-எனது குடும்பத்தினருடன் கொண்டாடினேன்! ’

PS: அர்ஜுன் ஐபிஎல்லில் பிஸியாக இருப்பதால் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்