தமிழ் செய்திகள்  /  Sports  /  Sikandar Raza And Shahrukh Khan Knock Helps Pbks To Beat Lsg By 2 Wickets In Their Home

IPL: அடித்தளம் அ்மைத்த ராசா! பினிஷ் செய்த ஷாருக்கான்! பஞ்சாப்புக்கு 3வது வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 15, 2023 11:49 PM IST

LSG vs PBKS: ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ராசா அணிக்கு சரியான அடித்தளம் அமைத்து கொடுத்தார். கடைசியாக பேட் செய்த ஷாருக்கான அதிரடியாக பினிஷ் செய்து பஞ்சாப்புக்கு மூன்றாவது வெற்றியை தேடி தந்தார்.

பஞ்சாப் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ராசா பவுண்டரி அடித்த காட்சி
பஞ்சாப் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ராசா பவுண்டரி அடித்த காட்சி (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னெள அணி, கேஎல் ராகுலின் அரைசதத்தால் 159 ரன்கள் குவித்தது. இதையடுத்து 160 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான அதர்வ தைடே 0, பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், ஷார்ட் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டுக்கு பிறகு ஹர்ப்ரீத் சிங்குடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா.

ஹர்ப்ரீத் சிங் 22 ரன்கள எடுத்து காலியாக, அடுத்த வந்த கேப்டன் சாம் கரன் 6, ஜித்தேஷ் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனார் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அப்போது பேட் செய்ய வந்த ஷாருக்கான் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இதற்கிடையே சிறப்பாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட வந்த ராசா அரைசதம் விளாசி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

செட்டான பேட்ஸ்மேனான ராசா அவுட்டானபோதிலும் தனது அதிரடியை தொடர்ந்தார் ஷாருக்கான். 10 பந்துகளில் அவர் 23 ரன்கள் அடிக்க, 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

லக்னெள அணியில் சிறப்பாக பந்து வீசிய இளம் வீரர் யுத்வீர் சிங் 2, ரவி பிஷ்னோய் 2, மார்க் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறிய நிலையில், லக்னெள அணி தொடர்ந்து 2வது இடத்தில் நீடித்து வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்