தமிழ் செய்திகள்  /  Sports  /  Ms Dhoni Likely To Be Admitted To Mumbai's Kokilaben Hospital For Knee Injury; Details Here

MS Dhoni: மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி! அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு? முழு விபரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 01, 2023 07:17 AM IST

ஐபிஎல் 2023 சீசன் தொடங்கும் முன்னரே மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தோனி, வலியுடனே அதனை சமாளித்தவாறே சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி
காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த சீசன் முழுக்கவே மூட்டு பாதிப்புடன் விளையாடி வந்த சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்படவுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இடது மூட்டு பகுதியில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் தோனி. இதற்காக அறுவை சிகிச்சை செய்தால் 100 சதவீதம் அவர் பிட் ஆவார் என கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த சீசனில் தோனிக்கு 42 வயதாகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்பு போல் செயல்பட முடியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த சூழ்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது பற்றி தோனி இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது. அடுத்த சீசனிலும் விளையாடவது குறித்து தோனி தெரிவித்திருப்பதை சிஎஸ்கே நிர்வாகவும் வரவேற்றுள்ளது.

ஏற்கனவே தோனி இறுதிப்போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில், ரசிகர்களின் விருப்பத்துக்காக அடுத்த சீசனிலும் விளையாட முயற்சிப்பேன் என்றார். ஆனால் அது கடினமான விஷயம் என்பது உடல்நிலை குறித்து முடிவு செய்வேன் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், உடல் ஒத்துழைத்தால் இன்னும் ஒரு சீசன் கிரிக்கெட் விளையாடுவேன் என கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகவே அமைந்தது.

ஐபிஎல் 2023 சீசன் முழுக்க 16 போட்டிகளில் விளையாடிய எம்எஸ் தோனி 12 இன்னிங்ஸில் பேட் செய்து 8 போட்டிகளில் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

மொத்தம் 57 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோராக 32 நாட் அவுட் உள்ளது. 182.45 என சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் தோனி, 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்