தமிழ் செய்திகள்  /  Sports  /  Kkr Vs Srh Will Hyderabad Continue Their Winning Clash With Kkr In Kolkata

KKR Vs SRH: வெற்றி நடையைத் தொடருமா ஐதராபாத்?-கொல்கத்தாவில் KKR உடன் மோதல்

Manigandan K T HT Tamil
Apr 14, 2023 06:05 AM IST

IPL 2023: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது.

ஐதராபாத் கேப்டன் மார்க்ரம், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா
ஐதராபாத் கேப்டன் மார்க்ரம், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

டாஸ் 7 மணிக்கு போடப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கொல்கத்தாவிற்கு இருக்கும்.

கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியும் 1 இல் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது.

அடுத்தடுத்த ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியது.

அதிலும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அந்த ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்தது. கிட்டத்தட்ட பைனல் ஆட்டம் போன்றே அந்த ஆட்டம் இருந்தது.

இதன்காரணமாக கொல்கத்தா அணி நல்ல நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை சந்திக்கும்.

அதேபோல், எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி, கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை அருமையாக வீழ்த்தி அசத்தியது. அதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுடன் ஐதராபாத் அணி தோல்வியைச் சந்தித்தது.

மைதானம் எப்படி?

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். நிறைய ஸ்கோர் எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல், ஸ்பின் பவுலர்களுக்கு இந்த மைதானம் கைகொடுக்கும். டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) -உத்தேச பிளேயிங் லெவன்

ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேட்ச்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)-உத்தேச பிளேயிங் லெவன்

ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

இந்தப் போட்டியை ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்