தமிழ் செய்திகள்  /  Sports  /  Ipl 2023: Gujarat Titans Beats Chennai Super Kings By 5 Wickets

IPL 2023: பேட்டிங், பெளலிங் என ஜொலித்த ரஷித் கான்! சிஎஸ்கேவுக்கு தொடரும் சோகம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2023 11:40 PM IST

அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்த இளம் பெளலர்கள் குஜராத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தியபோதிலும், ரஷித் கான் கடைசி கட்டத்தில் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித் கான் வெற்றியை தட்டி பறித்தார்.

குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த சுப்மன் கில்
குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த சுப்மன் கில் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே பேட்டர்கள் சொதப்பலான பேட்டிங் செய்தது. 

இதைத்தொடர்ந்து 179 ரன்கள் இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஓபனிங் பேட்ஸ்மேன்கள் விருத்திமான் சஹா - சுப்மன் கில் ஆகியோர் அளித்தனர். சஹா 25 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணியின் அறிமுக வீரர் ஹங்கர்கேகர் பந்தில் அவுட்டானர்.

இவரை தொடர்ந்து முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரி அருகே கேட்ச் பிடிக்க முயற்சித்து காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன். சிறப்பாக பேட் செய்த இவர் தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவரும் சுப்மன் கில்லும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் அணியின் ஸ்கோர் உயரந்ததுடன், தேவைப்படும் ரன் ரேட்டும் கட்டுக்குள் இருந்தது.

சாய் சுதர்சன் 22 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்த வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களில் ஜடேஜா பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து வந்த விஜய் சங்கர் தொடக்கத்தில் தடுமாறியபோதிலும், பின்னர் பவுண்டரி சிக்ஸர் என ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையே அரைசதம் அடித்த சுப்மன் கில் 63 ரன்னில் அவுட்டானர். அதே போல் விஜய் சங்கரும் 27 ரன்களில் அவுட்டான நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவை என்று இருந்தபோது பேட் செய்ய வந்தார் ரஷித் கான். அவர் அடுத்தடுத்து ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க தேவைப்படும் ரன்ரேட் குறைந்தது. 

கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்திலேயே ராகுல் திவாட்டிய சிக்ஸர், பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தார். 

சிஎஸ்கே பெளலர்களில் அறிமுக வீரரான ஹங்கர்கேகர் ரன்கள் சற்று வாரி வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹார் விக்கெட்டுகள் வீழ்த்தாதபோதிலும் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக சிறப்பாக பந்து வீசினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் வீழ்த்தினாலு்ம மோசமாக பந்து வீசி அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். 

ரஷித் கான் சிஎஸ்கே அணியின் முக்கிய விக்கெட்டுகளான மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வீழ்த்தியதுடன் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார். இதன் காரணமாக ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

கடந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக மோதிய இன்றைய போட்டியிலும் வெற்றி பெறாமல் ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது. இதனால் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் மோசமான பார்ம் தொடர்ந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்