தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Aadhav Arjuna: சென்னையில் கூடைப்பந்து போட்டி.. ஜெயிச்சா 3 லட்சம் பரிசு.. கோவா செல்ல வாய்ப்பு - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

Aadhav Arjuna: சென்னையில் கூடைப்பந்து போட்டி.. ஜெயிச்சா 3 லட்சம் பரிசு.. கோவா செல்ல வாய்ப்பு - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 23, 2023 08:52 AM IST

த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து தேசிய சீனியர் போட்டிகள் சென்னையில் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Aadhav Arjuna
Aadhav Arjuna

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் அணிக்கு 3 வீரர்கள் இடம்பெறுவார்கள். கூடைப்பந்து விளையாட்டின் அரை மைதானத்தில் விளையாடப்படும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து ரயில்வே அணி உட்பட 30 மாநில ஆடவர் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்பார்கள். 

இந்த போட்டிகளில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37 வது தேசிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.“ என்றார்

மேலும் பேசிய அவர், “ இந்த போட்டிகளை இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது. ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு போதிய கட்டமைப்புகளை உருவாக்கியும், அகடமிகளை உருவாக்கி வீரர்களை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் கிராமங்கள் முதல் அனைத்து இடங்களிலும் 3*3 போட்டிக்கான வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

இந்த போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றும் மற்றும் நாளையும் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்