தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Pak: இந்தியா-பாக்., இன்று பலப்பரீட்சை: காயத்தால் முக்கிய வீராங்கனை விலகல்

IND vs PAK: இந்தியா-பாக்., இன்று பலப்பரீட்சை: காயத்தால் முக்கிய வீராங்கனை விலகல்

Manigandan K T HT Tamil
Feb 12, 2023 11:31 AM IST

ICC T20 World Cup: மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இன்று இந்தியாவும்-பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பாக்., கேப்டன் பிஸ்மா மரூஃப்
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பாக்., கேப்டன் பிஸ்மா மரூஃப்

ட்ரெண்டிங் செய்திகள்

குரூப் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் உலகக் கோப்பையை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் கேப் டவுனில் மோதின. அந்த ஆட்டத்தில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குரூப் பி பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை இங்கிலாந்து மகளிர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

குரூப் ஏ பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்தை ஆஸி., மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி கண்டது.

இந்நிலையில், குரூப் பி பிரிவில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகள் டி20 சர்வதேச போட்டிகளில் பலமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தியா 16 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, பாகிஸ்தான் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 3 முறை பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது. அந்த மூன்று முறையுமே இந்தியா வென்றுள்ளது.

இதுவரை இரு அணிகளுக்கு இடையே அதிகபட்ச ஸ்கோரை ஸ்மிருதி மந்தனா பதிவு செய்துள்ளார். அவர் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 217 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக விளாசியுள்ளார்.

அதில் ஒரு சதமும், இரு அரை சதமும் அடங்கும். அதேபோல், அதிக விக்கெட்டுகளை எடுத்து பெருமையை இந்தியாவின் பூணம் யாதவ் வைத்துள்ளார். அவர் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளார்.

இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலும், பாகிஸ்தான் அணி, பிஸ்மா மரூஃப் தலைமையிலும் களம் காண்கிறது.

ஸ்மிருதி மந்தனா விளையாடுவாரா?

கேப்டவுனில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியில் இல்லாதது பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

U-19 உலகக் கோப்பையை வென்று தந்தை ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஜெமிமா ராட்ரிஜ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வர் கெய்க்வாட் உள்ளிட்ட வீராங்கனைகள் நல்ல பார்மில் உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்பு பஞ்சம் இருக்காது. ஸ்டார் ஸ்போர்ட், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்