தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus:1st இன்னிங்சில் தடுமாறும் இந்திய அணி..பேட்டிங்கில் சொதப்பிய வீரர்கள்

IND vs AUS:1st இன்னிங்சில் தடுமாறும் இந்திய அணி..பேட்டிங்கில் சொதப்பிய வீரர்கள்

Manigandan K T HT Tamil
Mar 01, 2023 11:33 AM IST

Border-Gavaskar Test: ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் நடையைக் கட்டினார். கோலி 22 ரன்களிலும், புஜாரா 1 ரன்னில் செல்ல, ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார்.

நாதன் லயன் வீசிய பந்தில் போல்டு ஆன இந்தியாவின் புஜாரா.
நாதன் லயன் வீசிய பந்தில் போல்டு ஆன இந்தியாவின் புஜாரா. (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்ற முன்னிலையில் உள்ள நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் களத்தில் இறங்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதால் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார்.

ஸ்கோர் என்னவோ 34 என தான் இருந்தது. பின்னர் வந்த புஜாரா, விராட் கோலி ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் நடையைக் கட்டினார். கோலி 22 ரன்களிலும், புஜாரா 1 ரன்னில் செல்ல, ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார்.

இவ்வாறாக 25 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை பதிவு செய்தது.

ஆஸி., தரப்பில் அதிகபட்சமாக மாத்யூ குனேமேன், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டாட் முர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி நடை போடும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், 3வது ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சொதப்பி வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்