தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Icc U-19 Worldcup:ஒரே ஓவரில் 26 ரன்கள்.. பந்தை சிதறவிட்ட இந்திய இளம் வீராங்கனை!

ICC U-19 Worldcup:ஒரே ஓவரில் 26 ரன்கள்.. பந்தை சிதறவிட்ட இந்திய இளம் வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Jan 17, 2023 11:56 AM IST

19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார் இந்திய அணியின் கேப்டன் ஷஃபாலி வர்மா.

இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா
இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 49 ரன்கள் எடுத்திருந்த ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இருப்பினும், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்தது.

அடுத்ததாக 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களில் சுருண்டது. இதன்மூலம், இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் என 34 பந்துகளில் 78 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

16 பந்துகளில் 45 ரன்கள்

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கேப்டன் ஷஃபாலி வர்மா 16 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். அவர் அந்த ஆட்டத்தில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளை அடித்தார்.

அந்த ஆட்டத்தில் 6வது ஓவரை வீசிய தென் ஆப்பிரிக்கா இளம் வீராங்கனை நினி வீசினார். அந்த ஓவரை ஷஃபாலி வர்மா பதம் பார்த்தார். முதல் 5 பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு விரட்டி 20 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன் பிறகு அந்த இளம் வீராங்கனைக்கு ஓவர் வீச வாய்ப்பே வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாளை இந்திய மகளிருக்கும், ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கும் இடையே குரூப் டி பிரிவில் லீக் ஆட்டம் நடக்கவுள்ளது.

இந்தத் தொடரில் குரூப் டி பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்